நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும்- கமல்ஹாசன்

 
அரசியல் மாண்பு, அடிபணியா வீரம் கொண்ட தலைவர் அண்ணா - கமல்ஹாசன்..

ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட’திராவிட நல்திருநாடு’... ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை
 
சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்றுவரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
 
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. 


அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும்,  இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.