எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு – மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்!

 

எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு – மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்!

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு – மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்!

எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். Critical ஆக இருக்கிறார், நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது” எனக்கூறினார்.