‘எடுத்த காரியம் எதுவாயினும் இடைநிறுத்திவிடாத உறுதி’- சீமானுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

 
kamal haasan wishes to seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kamal Haasan's flop show: TN voters' stern message to celebs - The Sunday  Guardian Live

நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் சீமானின் பிறந்த நாளை நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் பிறந்த நாளுக்கு, தன் உள்ளத்தைத் திறந்துவைத்து வாழ்த்தியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமான். விரிவான அந்த வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன். தொட்டடுத்த நாளான இன்றே தன் பிறந்த நாள் காணும் அவரை மனதார வாழ்த்துகிறேன். எடுத்த காரியம் எதுவாயினும் இடைநிறுத்திவிடாத உறுதி, தான் கொண்ட கருத்துகளைச் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து பரப்பும் தெளிவு என செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரரை வாழ்த்துவதில் ஒரு மூத்தவனாக மனமிக மகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.