மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட கமல்ஹாசன் ; நிவாரண உதவிகளை வழங்கிய சசிகலா

 
ttn

சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக சென்னையில் கடந்த 5 நாட்களாக கன மழை வெளுத்து வாங்கியது.  இதனால் சென்னை மாநகர் முழுவதும் வெளியானது வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர்.  இதையடுத்து ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.  அத்துடன் மழை நீரை வெளியேற்றும் பணிகளும் சென்னை மாநகராட்சியினரால் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ttn

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட இடங்களை அரசியல் கட்சி தலைவர்கள் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.  அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று சென்னை தரமணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.  அத்துடன் அங்கிருந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்த கமல் ஹாசனுடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், "இது வருடா வருடம் வரக்கூடிய பிரச்சினை. பருவமழையை பேரிடராக மாற்றியது நம்முடைய குற்றம். இதற்கு நாளும் பொறுப்பேற்க வேண்டும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

ttn

அதேபோல் சென்னை கேகே நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார் சசிகலா. சென்னை வடபழனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய சசிகலா,  சென்னை கோயம்பேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.