"இன்னமும் பரவல் நீங்கவில்லை” - கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!

 
கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Kamal Haasan to launch own fashion brand? | Lifestyle News,The Indian  Express

கமல்ஹாசன் ‘House of Khaddar’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை பிராண்டை உருவாக்கியுள்ளார்.  இந்தியாவின் காதி ஆடைகளைப் பல்வேறு உலக நாடுகளில் பிரபலமடைய செய்யும் நோக்கில் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தி வருகிறார். அதன் முதல் முயற்சியாக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் சிகாகோ நகரில் இதுதொடர்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார். அவர் அமெரிக்கா சென்ற விவரமே, அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மூலமே தெரியவந்தது.


இந்த நிகழ்ச்சி குறித்து கூட சனிக்கிழமை ஒளிப்பரப்பட்ட பிக்பாஸில் கமல் கூறியிருந்தார். அப்போது, "அது வெளியூர். இது தான் என்னுடைய வீடு. வீட்டிற்கு திரும்பி வந்து தானே ஆக வேண்டும். நான் இதுவரை எனது பணியில் சரியாக இருந்துள்ளேன். ஒரு போதும் கடமை தவறியதில்லை. இனியும் கடமை தவற மாட்டேன்” என பேசியிருந்தார். ஆனால் இன்று திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். வரவிருக்கும் எபிசோட்களில் கமல் பங்கேற்பரா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.


 


 

null