கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு யார் காரணம்? மாணவியின் தாய் பகீர் தகவல்

 
ஸ்ரீமதி தாய்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பள்ளி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனத்துக்கு தீவைத்த  போராட்டக்காரர்கள் – News18 Tamil

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர்.இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு மாணவர்கள் காரணமல்ல, பள்ளி வளாகத்திலிருந்துதான் முதலில் தாக்குதல் தொடங்கியது நாங்கள் அமைதியான வழியில் போராடுவதையே விரும்புகிறோம் தமிழக அரசு தங்களுக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும் என்று இறந்த மாணவியின் தாய் செல்வி கேட்டுகொண்டார். மேலும் தங்களது மகளின் இறப்புக்கு நீதிகேட்டு போராடிவரும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மாணவியின் தாய், தந்தை இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இறந்தமாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், வன்முறை எந்த விதத்தில் நடந்தது என்பதை தமிழக அரசு முறையாக விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்கள் தரப்பில் வன்முறையில் ஈடுபடவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர்களது மாணவர்களின் நலன் கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது தமிழக அரசுகடமை காட்டக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் மேலும் மாணவி இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 25 லட்சம் நிவாரணம். வழங்க வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்