கலைஞர் நினைவு நாணயம் : ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை..!

 
kalaignar 100


கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ஒரே நாளில் ரூ. 50 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அத்துடன்  இந்த நூற்றண்டு நிறைவு விழாவின் அடையாளமாக  அவரது உருவம் பொறித்த ரூ.100  நாணயம் கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நாணயத்தை வெளியிட்டார்.  இந்த நாணயம் தற்போது திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கிறது.  

arivalayam

ஒரு நாணயம் ரூ.10,000 என விற்பனை செய்யப்படும் நிலையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என அக்கட்சியினர் பலரும் வாங்கிச் செல்கின்றனர்.  முன்னதாக தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு கலைஞர் நினைவு நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது.  கலைஞர் நினைவு நாணயத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 500 நாணயங்கள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 50 லட்சத்திற்கு கலைஞர் உருவம் பொறித்த நாணயம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.