திமுக எதிர்க்கட்சியாக வருவதற்கு கூட திருமாவளவன் விரும்பவில்லை- கடம்பூர் ராஜூ

 
“எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

திமுக எதிர்க்கட்சியாக கூட வர திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை என அதிமுக முன்னாள அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்  ராஜூ, “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இருந்து திமுக ஊழலுக்கு எதிரான கட்சி என்ற மாயை அகற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. திமுக ஆட்சியில் தான் அமைச்சராக இருந்து ‌செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  சிறையில் இருந்த நாட்களை சாதனையாக கூறுகின்றனர். செந்தில் பாலாஜியை முதல்வராக கூட ஆக்கலாம், அதற்கு விதி இருக்கிறது. ஆனால் மரபை பார்க்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் விதியை மதிக்கின்றாரா அல்லது மரபை கடைபிடிக்கின்றாரா என்பது அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தெரியவரும்

ஒவ்வொரு தலைவரும் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை கூறுவார்கள். 2026-இல் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரும். இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026-இல் திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்பதைத்தான் திருமாவளவன் கருத்தாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும். 2011-ல் அதிமுக ஆளும் கட்சியாக வந்தது, எங்களுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியாக வந்தது, அந்த வரலாறு  2026ல் திரும்பப் போகிறது. திமுக எதிர்க்கட்சியாக கூட வர திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை என்பதுதான் இதிலிருந்து தெரிய வரும் கருத்தாக நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. செந்தில் பாலாஜி சிறை செல்வார் என்ற மு.க. ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 கோரிக்கை கொடுத்தால் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அதில் கொடுக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் மக்களை தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால்  தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் ஏமாற்றும் அரசாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று பட வேண்டுமானாலும் எடுக்கலாம், தனது இருப்பைக் காட்டிக்கொள்ள தர்மயுத்தம் நடத்தப் போவதாக கூறுகிறார்” என தெரிவித்தார்.