திமுக கூட்டணியில் வெடித்த மோதல்... தோழமைக்கான இலக்கணம் அல்ல- முரசொலி காட்டம்

 
ச்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? என மார்க்சிஸ்ட் மாநாட்டில் அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய நிலையில், திமுக நாளேடு முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் போராட்டம் ஆர்பாட்டத்திற்கு நடத்த அனுமதி மறுப்பது ஏன்? தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் செய்துவீட்டீர்களா? சீப்பை மறைத்து வைத்துவிட்டதால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் செய்வோம்” எனக் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக நாளேடான முரசொலி, “தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.... மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமைக்கு இலக்கணம் அல்ல. தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா? என அவர் பேசியதை தடுக்கவில்லை. தமிழ்நாட்டில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லையா? நடக்கவே இல்லையா? போராட்டங்களை நடத்திவிட்டு போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல, மனசாட்சிக்கும் அறமல்ல. 

K balakrishnan

தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை என உருவாக்கத் துடித்து குழப்பம் ஏற்படுத்தும் சிலருக்காக எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா கே.பாலகிருஷ்ணன் இருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.