"தேர்தலில் பாமக ஆதரவு இல்லாமலேயே திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது"- கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

ஒட்டுமொத்த வன்னியர்களும் பாமக பின்பு இருப்பதாக ராமதாஸ் கூறுவது தவறு, ஏற்கனவே பாமக இல்லாமல்தான் திமுக கூட்டணி வென்றுள்ளது என ராமதாஸ் பேச்சுக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். 

K balakrishnan

நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கிராமத்தில் உள்ள நிலங்கள், கனிம வளங்களை, கடல் வளங்களை  கார்பிரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து வரும் பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை கிராமப்புறங்களில் உள்ள விவசாய தொழிலாளிகளுக்கு வருமானம் இல்லை. தமிழ்நாட்டில் எத்தனை ஆட்சி மாறினாலும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற எங்களது போராட்டம் தொடர்கிறது. பஞ்சமி நிலங்களை மீட்க எங்களது போராட்டம் தொடரும். திமுக அரசு இந்த அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா இதுவரை மன்னிப்பு கேட்காமல் பேசியதை நியாயப்படுத்தி வருகிறார். நாடாளுமன்றம் முடங்கி இதுவரை நாடுமுழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமித்ஷா பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அமித்ஷா பேசியது தவறு. வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு வரும் அமித்ஷாவை எதிர்த்து இடதுசாரி அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ள அழைப்புக் கொடுத்தார். 

k balakrishnan

தமிழ்நாட்டில் அறை நூறாண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சியில் உள்ளன. பெரியாரின் வாரிசுகள் பெரியாரை தூக்கி பிடிப்பவர்களே அதிகம் உள்ள நிலையில், இன்றுவரை தமிழகத்தில் குழந்தை திருமணம், பெண்ணடிமைத்தனம், ஆணவக்கொலை என அனைத்தும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. உரிமைகளை மட்டுமே எங்களது கட்சியுடன் வலியுறுத்தி வருகிறோம், அதை வைத்து நாங்கள் தவெகவுக்கு தாவும் எண்ணம் எங்களுக்கு இல்லை. கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மக்களை தேர்ந்தெடுக்க கொண்டு வந்த கல்வி முறையை மாற்றவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள குழப்பங்கள் போதாதென ராமதாஸ் பெறுவது புதிய குழப்பம், ஏற்கனவே பாமக ஆதரவு இல்லாமல்தான் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. ஏற்கனவே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அவசர கெதியில் கொண்டு வந்தது என்று நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வன்னியர்கள் முழுவதும் பாமக ராமதாஸ் பக்கம் இருப்பதாக கூறுவது தவறு, எந்த சாதி கட்சி பின்பும் அந்த சாதி மக்கள் முழுவதும் கிடையாது” என்றார்.