நீதி கேட்கும் நெட்டிசன்கள் - #justiceforsrimathi ஹேஸ்டேக் டிரெண்டிங்

 
srimathi

மர்மமான முறையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் #justiceforsrimathi என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்ன மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் வரும் நிலையில், மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்து பள்ளிக்குள்  போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை சூறையாடியதோடு, பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளிக்கும் நிலையில், வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  

justice for srimathi

இந்நிலையில், அந்த மாணவிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளமான டுவிட்டரில் #justiceforsrimathi என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.