#JUST IN : தவெக பொதுக்கூட்டம்.. களத்திற்கு வந்தார் விஜய்...!

 
1 1

தவெக பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் புதுச்சேரியில் இன்று (டிச.09) காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. கட்சி தலைவர் விஜய், காலை 10:30க்கு மைதானம் வருவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மைதானத்தை வந்தடைந்துள்ளார். சிறிது நேரத்தில், பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருவோரை காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பின்னரே உள்ளே அனுப்புகின்றனர். இந்நிலையில், தவெக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் உள்ளே நுழைய முற்பட்டபோது போலீசார் அவரை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்துள்ளனர். அப்போது அது அலாரம் எழுப்பியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை முழுவதும் சோதித்தனர். அப்போது அவரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

துப்பாக்கியுடன் வந்த நபர், சிவகங்கையைச் சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் டேவிட் என் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.