ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழ்நாடு அரசு இடையே ரூ.4,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 
அச் அச்

துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழ்நாடு அரசு இடையே ரூ.4,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1,000 பேருக்கு நேரடியாகவும், 15,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Image


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் JioHoter நிறுவனம் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு மற்றும் தமிழ்நாடு அரசு ஜியோ ஹாட்ஸ்டார் இடையே 4000 கோடி ரூபாய்க்காக புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம் ஆகியவை சென்னையில் உள்ள பிரபல நடத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, நாகார்ஜூனா, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு துணை முதல்வர் அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கையெழுத்திட்ட  கிரிக்கெட் மட்டை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

Image


நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சென்னை தென் மாநிலங்களின் படைப்பாற்றல் தலைநகராக இருந்தது. தமிழ்நாட்டின் வரலாறு, கலை மற்றும் இலக்கியத்தை வரையறுக்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் வடிவத்தை மாற்றினார். எந்த ஊரிலிருந்தும் இளம் திரைப்பட தயாரிப்பாளர் ஒரு கதையை பதிவேற்றி உலகம் முழுவதும் பார்வையாளர்களைப் பெறவுள்ளனர். இன்றைய காலத்தில் கதை தான் முக்கியம் அது தான் வெற்றி பெறுகிறது. ஒவ்வொருவரும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. ஜியோ தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி முதலீடு செய்யும், இது எங்கள் மாநிலத்திற்கு 1000 நேரடி வேலைகள் மற்றும் 15 ஆயிரம் மறைமுக வேலைகளை வழங்குகிறது” என்றார்.