‘நகையே இல்லாமல் நகைக்கடன்’… கூட்டுறவு வங்கியில் அரங்கேறிய பலே மோசடி அம்பலம்!

 

‘நகையே இல்லாமல் நகைக்கடன்’… கூட்டுறவு வங்கியில் அரங்கேறிய பலே மோசடி அம்பலம்!

குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் 3 கோடி ரூபாய்க்கு மேல் நகைக் கடன் வாங்கி மோசடி செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் 5 பவுன் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கான அறிவிப்பையும் முதல்வர் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்டார். ஏழை, எளிய மக்களின் 5 பவுன் நகை நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். நகைக்கடன் விவரங்கள் ஆராயப்பட்டு உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

‘நகையே இல்லாமல் நகைக்கடன்’… கூட்டுறவு வங்கியில் அரங்கேறிய பலே மோசடி அம்பலம்!

முதல்வரின் உத்தரவின் படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பல இடங்களில் நகைக் கடன்களில் மோசடி செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. போலி நகைகளை வைத்து மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த இலையில் குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

அங்கு மொத்தம் நகை கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 548. ஆனால் 261 பேரின் நகை பைகள் அங்கு இல்லை. இதன் மூலமாக நகையே இல்லாமல் ரூ2.3 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பது அம்பலமாகியுள்ளது. நகையே இல்லாமல் நகைக்கடன் பெற்றது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.