ஆர்த்தி மீது ஜெயம் ரவி காவல்துறையில் புகார்

 
ஆர்த்தி

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

jayam ravi aarthi ravi family court

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரவி. இவர் சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன்ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர். ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜெயம் ரவி, விவாகரத்துக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனிடையே விவாகரத்து விவகாரம் முழுக்க முழுக்க ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எனவும், குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்தார். இதையடுத்து ஜெயம் ரவியை ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது.

ஜெயம் ரவி

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருந்து தனது உடைமைகளை பெற்றுத்தர வேண்டுமென புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஜெயம்ரவியின் கார், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மனைவி ஆர்த்தியின் வீட்டில் உள்ளதாக தெரிகிறது.