ஓபிஎஸ் என்பவர் ஒரு கோஷ்டி; அவர் கட்சி அல்ல- ஜெயக்குமார்

 
jayakumar

ஓபிஎஸ் என்பவர் ஒரு கோஷ்டி, அவர் கட்சி அல்ல, கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Ex-AIADMK Minister Jayakumar gets conditional bail, to walk out of prison |  The News Minute

சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 

அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஓபிஎஸ் என்பவர் ஒரு கோஷ்டி, அவர் கட்சி அல்ல. கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. ஓ.பி.எஸ்க்கு தொண்டர் ஆதரவும் இல்லை, பொதுமக்கள் ஆதரவும் இல்லை.சேராத இடத்தில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என்ற பாடலைப் பாடி வஞ்சகன் என்ற தினகரனோடு கூட்டு சேர்ந்து பாழாய்ப் போய்விட்டார் ஓ.பன்னீர்செல்வம். அரசாங்கத்திற்கு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல்  சொத்து வரி,மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்தி உள்ளோம்” எனக் கூறினார்.

முன்னதாக அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.