ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அயலக அணி முக்கிய நிர்வாகி ஜாபர் சாதிக் சொந்தமான நட்சத்திர ஹோட்டல் மற்றும் 55 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.55.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கின் ஹோட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாபர் சாதிக்கும் ஒருவராவார்.