“தமிழ்நாட்டில் அனைவருக்கும் அக்டோபருக்குள் 1 டோஸ் தடுப்பூசி”

 

“தமிழ்நாட்டில் அனைவருக்கும் அக்டோபருக்குள் 1 டோஸ் தடுப்பூசி”

சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, மக்கள்நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு தரப்பில் இதுவரை 3.97 கோடி தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகள் மூலம் 74 லட்சம் தடுப்பூசிகள் என மொத்தமாக 4.2 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

“தமிழ்நாட்டில் அனைவருக்கும் அக்டோபருக்குள் 1 டோஸ் தடுப்பூசி”

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கக் கூடிய தூத்துக்குடி, கடலூர் நெல்லை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு 5 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சென்னை சுற்றி இருக்கக் கூடிய சிலபகுதிகளில் கடந்த சில தினங்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் அனைவருக்கும் அக்டோபருக்குள் 1 டோஸ் தடுப்பூசி”

அடுத்த 6 வாரங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்றை முழுமையாக தடுக்க முடியும். அக்டோபர் மாதத்துக்குள் தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார். சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நினைத்ததை விட 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தி தமிழ்நாடு அரசு சாதனை படைத்தது கவனிக்கத்தக்கது.