முடிஞ்சு போச்சு லீவு..!! இன்று மீண்டும் பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள்..

 
school school

தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  

நடப்பு கல்வியாண்டில்  காலாண்டு தேர்வு  11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த செப் 18 தொடங்கிய நிலையில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.20  தொடங்கியது. செப்டம்பர் 27ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. முன்னதாக  செப். 28 முதல்அக். 2 வரை 5 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு  அக்டோபர் 6ம் தேதி வரை  விடுமுறை நீட்டித்து உத்தரவிட்டது. 

PM Schools

அக்டோபர் 7ம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.   மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.  பள்ளி திறக்கும் நாளான இன்றைய தினமே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.  8 நாட்கள் விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் இன்று பள்ளிக்கு திரும்புகின்றனர்.