அரசு பள்ளிகளில் விரைவில் ஐடிஐ!
Updated: Dec 9, 2025, 19:19 IST1765288162059
ஐடிஐ இல்லாத பகுதிகளில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் ஐடிஐ ஆரம்பிக்கப்படுகிறது.

ஐடிஐ இல்லாத பகுதிகளில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் ஐடிஐ ஆரம்பிக்கப்படுகிறது. போதுமான இட வசதி உள்ள அரசு பள்ளிகளின் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் தர பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, ITI இருக்கும் இடங்கள் அல்லாத பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும், தொழில் மண்டலங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் மண்டலங்கள்/ தொழில் சாலைகள்/ தொழில்துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், இதன்மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


