இந்த மாவட்டங்களில் ‘நாளை மிக கனமழை’ பெய்யும்!

 

இந்த மாவட்டங்களில் ‘நாளை மிக கனமழை’ பெய்யும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் , புதுக்கோட்டை, தூத்துக்குடி ,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ,அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் ‘நாளை மிக கனமழை’ பெய்யும்!

நாளை மறுநாள் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 21ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் ‘நாளை மிக கனமழை’ பெய்யும்!

22ம் தேதி சேலம் ,திருவண்ணாமலை ,வேலூர் ,கிருஷ்ணகிரி ,ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.