ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்- ஐகோர்ட்

 
ச்

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியாக நடைபெறவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Highcourt


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ ராம் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வு முன்பு அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் முறையீடு செய்தார். தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார். நடத்தை விதிகளை மீறும்  வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பட்டுவருவதாகவும், கடந்து 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 500 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

டாக்டர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக   பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் ஆனால் வழக்கறிஞர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஸ்ரீராம் , ஓசூர் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியானது அல்ல என்பதும் தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்கப்பட்ட தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் எனவும் தெரிவித்தார். இருந்தபோதிலும் வழக்கறிஞர்களின் பாதுகப்பு குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், டி ஜி பிஆகியோருடன் தலைமைச்செயலகத்தில் கலந்துபோசுவதற்கு, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஏற்பாடு செய்ய வேண்டும் அதில் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தவேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 23ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.