கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க தடை!!

 
ttn

கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்ற பெயரை பெற்றுள்ளது.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன.  22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மலை ,  கடல் மட்டத்தில் இருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இங்கே பிரையண்ட் பார்க் , கொடைக்கானல் ஏரி, டால்பின் னொஸ் பாறை உள்ளிட்ட பல  இடங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பர்.

ttn

இந்த சூழலில் கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்கும் கலாச்சாரம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஏற்கனவே கொடைக்கானல் பகுதியில் உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். 

kodai

இந்நிலையில் அரசின் தடையை மீறி கூடாரம் அமைத்தால் நில உரிமையாளர்கள் மற்றும் கூடாரம்   அமைப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் எச்சரித்துள்ளார்.  நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்குவதால்,  வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.  இதனால் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.