ஒரு முதல்வருக்கே இந்த கதியா? அப்பல்லோவால் எழுந்த சர்ச்சை

 
jay

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    இந்த விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஆஜராக விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது.

 இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை தளத்தின் கண்காணிப்பு கேமராவை நிறுத்தச் சொன்னது யார் என்ற கேள்விக்கு,   அப்போதைய அதிமுக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவும்,  உளவுத்துறையான சத்தியமூர்த்தி ஆகியோர் சொன்னதன் அடிப்படையிலேயே சிசிடிவி சேவை நிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ap

 இதை அடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்திடம் அப்பல்லோ சிசிடிவி நிறுத்தப்பட்டது தொடர்பாக எந்த தகவலும் பதிவேற்ற படவில்லை என தெரிவித்திருக்கிறது.  

 இது தொடர்பாக எந்த தரவும் இல்லை என்றால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட தளத்தின் மொத்த கண்காணிப்பு கேமராவையும் நிறுத்தச் சொன்னது யார் என்ற ஐயப்பாடும் கேள்வியும் வலுவாக எழுந்திருக்கிறது.

 அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தமிழ் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்தவர்.   அப்படி இருக்கும்போது திட்டமிட்டே இந்த செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும்,   இதற்கு அதிமுகவினரே  ஒத்துப் போயிருக்கிறார்களே  என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.