சத்துணவில் அழுகிய முட்டையா? - ஆட்சியர் சொன்ன அதிர்ச்சி தகவல்

 
ஞ்ஞ்

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 16.12.2024 அன்று குழித்துறை பெண்கள் நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட 197 முட்டைகளில் 5 முட்டைகள் உடைந்தும்/அழுகிய முட்டைகளும் மற்றும் குழித்துறை கிராம தொடக்கப்பள்ளிகளில் பெறப்பட்ட 96 முட்டைகளில் 1 உடைந்தும்/அழுகிய நிலையில் இருந்த விபரம் தெரிந்த உடன் விநியோகஸ்தர் மூலம் புதிய முட்டைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. உடைந்த மற்றும் அழுகிய முட்டைகள் எதுவும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை. கெட்டுப்போன முட்டைகள் உடனடியாக அழிக்கப்பட்டது.

District Collector, Kanniyakumari (@collectorkki) / X

அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உரிய ஊட்டச்சத்து பெறுவதற்காகவே முட்டை வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் நீண்ட காலங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கெட்டுப்போன முட்டைகள் குழந்தைகளுக்கு எப்போதுமே வழங்கப்பட்டதில்லை. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவலை பரப்பி பெற்றோர்களுக்கும், பள்ளிக்குழந்தைகளுக்கும் அச்சம் ஏற்படும் வகையில் ஊடகங்களில் தகவல் வெளியானது. வெளியானதை தொடர்ந்து துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு குமரி  மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா  தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.