புதிய கூட்டணி உருவாகிறதா..? இன்று விஜய்யை சந்திக்கிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்..!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கி தேர்தல் வியூகங்களையும் வகுத்து வருகின்றனர். தமிழ்நாட்டுடன், புதுச்சேரிக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் விஜய்யின் தவெகவும் புதுச்சேரியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இன்று புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தவெக பொதுக்கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்காக விஜய், பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வருகிறார். ஹெலிபேடு மைதானத்தில் விஜய் வழக்கமாக பயன்படுத்தும் பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுகிறார்.
இந்நிலையில், ஜேசிஎம் மக்கள் மன்ற தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இன்று விஜய்யை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


