திமுகவின் B டீமாக செயல்படுகிறதா தமிழக வெற்றிக் கழகம்..?

 
1

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது, வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது 

இந்நிலையில் அந்த அறிக்கையில் உள்ள விஜய் அவர்களின் படம் மாற்றபட்டுள்ளது. முதலில் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள படத்தில் விஜய் நெற்றியில் குங்குமம் இருக்கும். தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள புகைப்படத்தில் குங்குமம் இல்லாத மாற்று படம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இணையத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

முன்னதாக விஜய் அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. திமுக கட்சி தலைமேல் வைத்து கொண்டாடும் பெரியாருக்கு அவரின் பிறந்தநாளில் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜய் அவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது திமுக கட்சியை போல் ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் புறக்கணித்து திராவிட சித்தாந்தத்தை பரப்பும் திமுகவின் B டீமாக செயல்படுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.