ஞானசேகரின் செல்போனை ஆய்வு செய்யும் புலனாய்வு குழு

 
anna univ

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் செல்போனை ஆய்வு செய் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்தார்.

இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் செல்போனை ஆய்வு செய் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரின் வாட்ஸ்அப் சாட் மற்றும் கால் ஹிஸ்டரிகளை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்ய உள்ளனர்.