காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்!

 
rain

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில்  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறாது  என்று நேற்றுவரை கணக்கிடப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்றுள்ளது.   சென்னை ,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மிக கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்த நிலையில்,  இன்று காலை கிடைத்த தகவல்கள் அடிப்படையில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது.

rain

 சென்னை வானிலை மைய அதிகாரிகள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில்,  இது வலுப்பெற்று அதே இடத்திலேயே நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது.  தற்போது புதிதாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பட்சத்தில் வட தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்கு தெற்கே உள்ள கடலூர்,விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.