விஜய் மாநாடு- விக்கிரவாண்டியில் இடம் தேர்வு எனத் தகவல்

 
விஜய்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay plans to hold the first convention of the Tamil Nadu Victory  Association | தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த விஜய் திட்டம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற புதிய அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார்.  ஆனால் வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில்தான் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார். அதற்கு முன்பாக எந்த தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருந்தார்.  இருப்பினும் கட்சியின் கொடி சின்னம் குறித்து அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்குவது, நலத்திட்டப் பணிகளை செய்வது உள்ளிட்ட விஜய்யின் அரசியல் முன்னெடுப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 22 அல்லது 26ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.