6 வது நாளாக இண்டிகோ விமான சேவை முடக்கம்

 
விமானியறையில் தீப்பற்றியதால் இண்டிகோ விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறங்கியது : விமானியறையில் தீப்பற்றியதால் இண்டிகோ விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறங்கியது :

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை முடக்கம் 6-வது நாளாக தொடர்கிறது. 

Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்;  கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி | Flight Fares Hike Due To  Indigo Issue Central ...

நாடு முழுவதும்   இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இண்டிகோ விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு, விமானி மற்றும் ஊழியர் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்சனை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்தநிலையில்  ஐதராபாத் விமான நிலையத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ஐதராபாத் விமான நிலையத்தில் ஏற்கனவே 69 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதேபோல் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு சில நாட்களில் இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் கட்டணம் ஒரு வாரத்திற்குள் பயணிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் இண்டிகோ விமானம் தெரிவித்துள்ளது.