டி20 தொடர்: இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு

 
 India vs New Zealand 2nd T20

நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று 2வது டி20 போட்டி ராஞ்சியில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் ஹர்ஷல் படேல் அறிமுக வீரராக களமிறங்கினார். நியூசிலாந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த சாப்மேன் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேரில் மிச்செல் 31 ரன்களில் இறுதிக்கட்டத்தில் எந்த ஒரு நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் ஜொலிக்கததால் அந்த அணியின் ரன்ரேட் வேகம் குறைந்தது. 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும்,அஸ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்து சிறப்பாக பந்து வீசினர்.