தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 3வது டி20 போட்டி!

 
ind vs eng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் இரண்டாவது டி29 போட்டி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியிலும் இந்திய அணி போராடி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இதேபோல் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் என கூறப்படுகிறது.