எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?

 
school

கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school leave

வட தமிழகத்தின் தென் கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும்,  பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  இதனால் சென்னை,  திருவள்ளூர்,   காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே  இரவு 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில், அதிகாலை 4 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இதனால் சென்னையின் பல இடங்களில் பலத்த காற்று வீசியது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 

rain school

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம், வேலூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் , தர்மபுரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி ,புதுச்சேரி ,காரைக்கால்,  கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.