இளையராஜாவின் சிம்பொனி இசை ஜன. 26ல் வெளியீடு

 
s

இளையராஜாவின் சிம்பொனி இசை வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.


தனது முதல் சிம்பொனி இசை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 26-ல் வெளியாகும் என இளையராஜா அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வீடியோ வெளியிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் சிம்பொனியை பதிவு செய்ததாகவும், இதை உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சிம்பொனி கோர்வை செய்த முதல் இந்தியர் என்ற பெயரையும் இளையராஜா பெற்றுள்ளார்.


இதுதொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! இந்த நன்னாளில் லண்டனில் எனது சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்தேன்..சிம்பொனி இசை அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்படும் என்பதை உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.