"கோமியம் குடித்தால் சரியாகும்"- ஐஐடி இயக்குனர் காமகோடி பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பா தமிழ்நாடு மாணவர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார்.
"காய்ச்சல் வந்தால் கோமியம் குடிக்க வேண்டும்"
— karthik (@karthik2766499) January 19, 2025
என்று சொல்கிற இவர்...
சென்னை ஐஐடி யின் இன்றைய இயக்குனர்.
phd முடித்த பேராசிரியர் Dr வி காமகோடி அவர்கள்@DMKITwing @Dmk_Thiruvarur @kalaivanandmk @TRBRajaa @k_poondi86184 @aravindh_87 pic.twitter.com/6udJnlXaTG
அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் அறிவியலுக்கு எதிராக பேசியிருப்பதை தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது. மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.