"தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

 
schools open

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  12ஆம் வகுப்புக்கு நாளை  முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில்,  11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

schools open

இந்த சூழலில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை  முதல் 13ஆம் தேதி வரை இறுதி தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.  அதேபோல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.  

School Education

இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அறிவித்துள்ளார். அத்துடன்  பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார் இதன் காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நாளை முதல் வழக்கமான வகுப்புகளுக்கு வரத் தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.