டாஸ்மாக் வேண்டாமென மக்கள் கூறினால் அந்த கடைகளை மாற்ற வேண்டும்- ஐகோர்ட்

 
tasmac

மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மதுக்கடையை மாற்ற வேண்டும் என  தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்து விட்டால் டாஸ்மாக் கடைகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி  நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.  

Madras High Court (Timings, History, Entry Fee, Images & Information) -  Chennai Tourism 2024

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்றதாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மனுவில், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும்  குத்தகை காலம் முடிந்த பிறகும் கடைகளை காலி செய்யாமல் நடத்தப்படுகிறது என்ற  அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விஷாகன் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் தெரிவித்தார்.

Tamil Nadu government | Ambrosia India

இதையடுத்து இதுபோல் மீண்டும்  புகார் வந்தால் நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனவும் எச்சரித்த நீதிபதி அரசு நிலம் என்றால் சட்டத்தை பயன்படுத்தும் போது, தனிநபர்களுக்கு சட்டம் இல்லையா எனக் கேட்ட நீதிபதி,  சட்டத்தை அரசு கையில் எடுக்க கூடாது எனவும் தெரிவித்தார். பின்னர், சுந்தருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி ரத்து செய்த நீதிபதி, குத்தகை காலம் முடிந்தால், கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படியும், டாஸ்மாக் கடை வேண்டாம் என மக்கள்  கூறினால், அந்த கடைகளை மாற்ற வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.