சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

 
assembly

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்டம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாதந்தோறும் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Image

சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை‌ செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு  அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள்.

Image

மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.