“உன் பொண்டாட்டிய என்கூட அனுப்பலனா அவ மேல ஆசிட் வீசிடுவேன்” மிரட்டிய இளைஞர்

 
Acid

சென்னை கொருக்குப்பேட்டையில் திருமணமான பெண்ணுடன் நட்பாகப் பழகி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். 

திருமணமான இளம்பெண்ணை ஆசை காட்டி பலாத்காரம் செய்த தம்பி... அரட்டி மிரட்டிய  அண்ணன்..!

கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவரது கணவர்  வண்ணாரப்பேட்டை.M.C ரோட்டிலுள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் அப்பெண்ணிடம் நட்பாக பழகி பின்  காதலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த திருமணமான பெண் கடந்த செப்டம்பர் மாதம் வினோத் உடன்  சென்று உள்ளார். பின்னர் வினோத்தின் நடவடிக்கை பிடிக்காததால் நான்கு நாட்களுக்கு முன்பு மீண்டும் தன் கணவரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை  ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கணவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த வினோத், குளித்துக் கொண்டிருந்த அப்பெண்ணிடம்  கதவைத் தட்டி  கையை பிடித்து இழுத்து தன்னோடு வந்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் ஆபாசப்படங்களை குடியிருப்பு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார், மேலும் ஒரு சில போட்டோக்களை கணவரின் செல்போனுக்கும் அனுப்பி உள்ளார். உனது மனைவியை என்னோடு அனுப்பி வைக்காவிட்டால் அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவேன் என்று கணவரை மிரட்டியுள்ளார்

இதுகுறித்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் கணவன், மனைவி இருவரும் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார்  கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகர் தெருவைச் சேர்ந்த வினோத்தை போலீசார் கைது செய்தனர்