’’நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன்.. உங்களுக்கு லட்சங்களை தருகிறேன்..’’

 
su

உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி என்று குறிப்பிட்டிப்பதோடு, திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் காயத்ரி ரகுராம். 

ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டது என்று படத்தின் டைட்டில் கார்டில் போட்டு விட்டாலும் கூட,  நிஜமாக பாதிக்கப்பட்டவர்கள் குறவர்கள்.  ஆனால் படத்தில் இருளர் சமூகம் என்பது போல் காட்டப்பட்டிருந்ததால்,  சூர்யாவும் இருளர் சமூகத்தின் கல்வி நலனுக்காக ஒரு கோடி ரூபாய் அறிவித்தார்.  ஆனால் உண்மையில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தான் அந்த பாதிப்பு நிகழ்ந்தது.   புனைவு என்பதற்காக படத்தில் குறவர் சமூகத்தை இருளர் சமூகமாக புனையப்பட்டிருக்கிறது.

 அந்தக் கதையில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்கள் இனத்திற்கும் ஏதும் செய்யாமல் அவருக்கும் ஏதும் செய்யாமல் வேறு ஒரு இனத்திற்கு சூர்யா உதவி செய்து விட்டார் என்று சர்ச்சை எழுந்தது.  மேலும் ராஜாக்கண்ணு என்கிற குறவர்  சமூகத்தைச் சேர்ந்தவர் சித்திரவதையில் மறைந்து விட்டாலும் அவரின் மனைவி பார்வதி  வாழ்ந்து வருகிறார்.   அதுவும் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்.  

m

 ஜெய் பீம் படத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சூர்யா அந்த பார்வதிக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டும்.   முறையான வீடுகூட இல்லாமல் ஒரு குடிசையில் வசித்து வருகிறார் .   அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர் .  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் வலியுறுத்தினார்.   இதன்பின்னர் சூர்யா,   ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து இருக்கிறார்.

 அது குறித்த அறிக்கையில்,   மறைந்த ராஜாவின் துணைவியார் பார்வதி அம்மாளுக்கு தேவை எனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் .  அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை செய்து அதில் இருந்து வருகிற வட்டித் தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய முடிவு செய்திருக்கிறோம் .  அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை இப்போது சேரும்படி செய்யப்படும் என்று கூறியுள்ளார். 

பஎ

 சூர்யா நடித்த ஜெய்ஹிந்த் படம் வெளியானபோது அதை பெரிதும் பாராட்டினர் முதல்வர் ஸ்டாலின்.  அதன்பின்னர் ஸ்டாலினிடம் தான் இருளர் நல நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்  சூர்யா.  இதன் பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மட்டும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.  அந்த நடவடிக்கைகளுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ’’உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி..’’என்று சூர்யாவை விமர்சித்திருக்கிறார்.  மேலும்,  ‘’திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன். ’’ என்கிறார்.  அவரின் இந்த  டுவிட்டர் பதிவி வைரலாகி வருகிறது.