“என்னுயிர் சௌமியா... சாரி, சாரி”- காதல் மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை

வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டியும் தன்னை பிளாக்மெயில் செய்யும் வீணகளைச் சேர்ந்த லாட்டரி சீட் ஜம்பவான் மாரிமுத்துவே என் தற்கொலைக்கு காரணம் கடிதம் எழுதியவைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வெல்டிங் பட்டறை உரிமையாளரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் செல்வகுமார் (எ) சக்தி(33. இவருக்கு திருமணமாகி சௌமியா என்ற மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கட்டனாச்சம்பட்டியில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வரும் நிலையில், இன்று மதியம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற சக்தி வீட்டில் யாரும் இல்லாத போது கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்பத்தினர் அவரது அறையில் சென்றபோது பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றினர். அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்பு தனக்கு கடன் வழங்கிய நபர்கள் மற்றும் தனக்கு வரவேண்டிய தொகைகள் உள்ளிட்டவைகளை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக கடிதத்தில் தனக்கு ராசிபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், அதற்கு தொடர்ந்து வட்டி கட்ட சொல்லி துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். மேலும் என் மரணத்திற்கு மாரிமுத்து தான் காரணம் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் கொடுத்த நபர் தொடர்ந்து வட்டித் தொகையை செலுத்த வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி சீட்டு போட்டு தான் தான் இவ்வளவு பெரிய கடனாளியாக ஆனது குடும்பத்திற்கு தெரிந்தால் கேவலமாகிவிடும் என்பதால் மாரிமுத்து இடம் கடன் பெற்று கடன் கட்ட முடியவில்லை வட்டி கட்ட முடியவில்லை என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் தன் மரணத்திற்கு முழு காரணம் மாரிமுத்து தான் என குறிப்பிடப்பட்டுள்ளது