தவெக மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கருக்கு பிரமாண்ட கட்அவுட்

 
தவெக மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் கட்-அவுட்

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு திடலின் நடுவே பிரமாண்டமாக காமராஜர், பெரியார், அம்பேத்கருக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு நடுவில் சுமார் 70 அடியில் நடிகர் விஜய் நிற்பது போன்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

தவெக மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் கட்-அவுட்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை விளக்க மாநாடாகவும் "வெற்றி கொள்கை திருவிழாவாக" இருக்கும் என அறிவித்திருத்திருக்கிறார். இந்த மாநாட்டிற்கு 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி 90  சதவிகிதம் பணி நிறைவுப்பெற்றுள்ளது. மாநாட்டு முகப்பு வாயிலில்  கோட்டை மதில் சுவர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையில் வெற்றிக் கொள்கை திருவிழா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மாநாட்டு மேடை இடதுபுறத்தில 50 அடி உயரத்திற்கு அம்பேத்கர், பெரியார், விஜய், காமராஜருக்கு கட் அவுட்டர்கள் வைக்கபட்டுள்ளன. அரசியல் கட்சி மாநாடு என்பதால் பெரிதும் எதிர்பார்கப்படுபதால் எந்த்தெந்த தலைவர்களின் படங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி லெட்டர் பேடில் உள்ளது போன்று மாநாட்டு திடலில் 50 அடி உயரத்தில் அம்பேத்கர், பெரியார், காமராஜருக்கு கட் அவுட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.