இந்த தீய்ந்து போன டயலாக்கை, எத்தனை முறை பேசுவீர்கள் - சு.வெங்கடேசன் எம்.பி!

 
1

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தமது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "வாராக்கடன் என்று அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்கின்ற இந்த தீய்ந்து போன டயலாக்கை, எத்தனை முறை பேசுவீர்கள்.

2021 - 2025 ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை, தனியார் துறை, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில், வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்ட தொகை 18,14,360 கோடி ரூபாய். இதில் இந்த 5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட தொகை 4,16,205 கோடி. வசூல் செய்யப்படாத தொகை 13,98,155 கோடி. வசூல் விகிதம் 23% மட்டுமே.

நீங்கள் (மத்திய அரசு) நேற்று (ஆகஸ்ட் 12) கேள்வி எண் 2617 க்கு மாநிலங்களவையில் தந்த பதில் தான் இந்த விவரங்கள் எல்லாம். கால் கிணறு கூட தாண்டவில்லை உங்கள் வசூல் "வேட்டை"... வாராக்கடன் வசூல் என்பது தொடர் நடவடிக்கை என்பது அரசின் வாதம். எப்போது தான் வசூல் செய்வீர்கள் என்பது தான் கேள்வி. நீங்கள் 2014 லிருந்து பெயர்களோடு, தொகையோடு கணக்கு கொடுங்கள். தேசம் பார்க்கட்டும் மக்கள் சேமிப்பு எவ்வாறு சூறையாடப்படுகிறதென்று." என்று சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.