ஞானசேகரனை எப்படி இயல்பாக நடமாட அனுமதிக்கலாம்?- அரசுக்கு மகளிர் ஆணையம் கேள்வி

 
ச்

ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை எப்படி அரசு இயல்பாக நடமாட அனுமதித்தது? என அரசுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பினார். 

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட பின் இன்று டெல்லி புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, “அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்தோம். தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து பேசினோம், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எதிராக என்ன குற்றங்களை யார் செய்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.


குற்றவாளி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும், எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள், அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? விசாரணை தொடர்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறோம்” என்றார்.