காஞ்சிபுரத்தில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
school

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 7 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பரவலாக கன மழை பெய்து வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள காரணத்தினால் இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்மாவட்டங்கள் ,கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

school leave

நேற்று ஈரோடு ,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அத்துடன் அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 25-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain school

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள 7 அரசுப் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.  வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் உயர்நிலை பள்ளி, பெரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது