கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், நாளை பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம். ஆகவே கட்டுமானத் தளங்களில் உள்ள உயர் கிரேன்கள், விளம்பர பதாகைகளை பாதுகாப்பாக கீழே இறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவு காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.