ஈரோட்டில் 53 பள்ளிகளுக்கு நாளை (பிப்.4) விடுமுறை

 
ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் 53 தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை (பிப்.04) விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் நாளை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 237 வாக்குச்சாவடிகளை கொண்ட இந்த தொகுதியில் 53 மையங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நாளை வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் பொறுப்பேற்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்று வாக்குச்சாவடிகளை நாளை மாலைக்குள் தயார் செய்ய உள்ளனர்.இதற்கு ஏதுவாக இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு பதிவு நடைபெறும் நாளை மறுதினம், 5.ம் தேதி பொது விடுமுறை தினமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை:  உடனடியாக பணிக்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்ட ஆசிரியர்கள் | Teachers ...


ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பள்ளிகளின் கவனத்திற்கு

1. வாக்குச்சாவடி  அமைந்துள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் 04.02.2025 அன்று வருகை புரிய தேவையில்லை காலை உணவு மற்றும் சத்துணவு கிடையாது ஆனால் ஆசிரியர்கள் வருகை புரிந்து  மாலை 4.10 வரை பள்ளியில் இருக்க வேண்டும்

2. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் வாக்குச்சாவடி அமையவில்லை என்றால் 04.02.2025 அன்று அப்பள்ளி முழுமையாக செயல்படும். மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் சத்துணவு கிடைக்கும் பள்ளி மாலை 4.10 வரை செயல்படும்.


3.  வாக்குச்சாவடி அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி /  மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள் *04.02.25* அன்று வருகை புரிய தேவையில்லை ஆசிரியர்கள் வருகை புரிய வேண்டும்.