கோயம்பேடு தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்கலாமா?? - சிஎம்டிஏ விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

 
தக்காளி

வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு காய்கறி சந்தையில்  கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 50 ரூபாய் குறைந்து நேற்று ரூபாய் 90 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறந்தால் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்க தயார் என்று, தக்காளி  மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சாமிநாதன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாளிகளை அனுமதிக்க முடியுமா?? என்று கேள்வி எழுப்பினர். மேலும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு வாகனம் மூலம் தக்காளி விற்பனையை ஏன் அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டனர். மேலும் இதுகுறித்து திங்கள் கிழமை விளக்கமளிக்குமாறு சிஎம்டிஏ மற்றும் மார்க்கெட் கமிட்டிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.