முடிந்தது புரட்டாசி... காசிமேட்டில் குவிந்த கூட்டம்

 
ச்

புரட்டாசி மாதம் முடிவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.  

zமீண்டும் களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்! - மின்னம்பலம்


இந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதம் கடந்த வியாழக்கிழமை முடிவடைந்து தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வருகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுவதால் பலர் இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்த நிலையில் புரட்டாசி மாதம் தற்போது முடிவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குச் சென்று திரும்பிய நிலையில் இன்று அதிக அளவில் மீன்கள் கிடைத்தன. அதிக அளவில் கிடைத்த மீன்களை மீனவர்கள் படகுகள் மூலம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். 

புரட்டாசி மாதம் முடிவடைந்தை அடுத்து ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிடாமல் இருந்த நிலையில் இவர்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்வதை காண முடிந்தது. பொதுமக்கள் அதிகளவில் குவிந்தாலும் மீன்களின் விலை எப்போதும் போல் வழக்கமான விலைக்கு விற்றது. ஒரு கிலோ வஞ்சரம் 950 ரூபாய், சங்கரா 500-550 ரூபாய், கொடுவா 350 ரூபாய், வவ்வால் ரூ.400-500 இறால் 450 ரூபாய், நண்டு 400 ரூபாய் என்ற விலையில் இன்று மீன்கள் விற்பனையானது.